Thursday, June 24, 2010



யாருமில்லாத பொழுதுகளில்
துணைக்கு வருகிறது
உன்னை போலவே
நிலா

Wednesday, June 16, 2010



பென்சில் கோடுகள்

எத்தனை முறை
எண்ணுவது
ரணங்களை

ஒரு முறையாவது
எண்ணியிருக்க வேண்டும்
ரணங்களின் கணங்களை


இங்கு எது முதல் ?

எண்ணமா
எண்ணிகையா
குறியீடா
நீயா
நானா

யாருக்கேனும் தெரியுமா

பதிவுகள் முக்கியமா ?
பகிர்தல்கள் முக்கியமா ?
இல்லை
படைத்தல்கள் முக்கியமா ?

மூலம் தெரியா
முகவுரைகளால்
என்ன சாதிக்க போகிறோம்

படித்தல்
படிகளாகி
ஏற்றி விடுவது
எதை எதை

எதில் புதைந்திருக்கிறது
என்பதை
எதில்
பதுக்கி வைத்துருக்கிரர்கள்

முதலில்
எதை தேடுவது ?

எதையா ?
எப்படியையா ?
.............................
உனக்கும் எனக்கும்
ஆன சந்திப்பை
நீயும் நானும் விரும்பாவிடினும்
நிகழ்த்துவது யாராக இருக்கும்

வேறு யாராக இருக்கும்

நம்மை விட
நம்மை நன்றாக
புரிந்திருக்கும் காதல் தான்

Monday, June 14, 2010


சவ ஊர்வலத்தில்
நடிக்காமல்
பிணம் மட்டும்
சாதிகள் இல்லையடி பாப்பா
இதை சொன்னவன்
எங்கள் சாதிகாரனடி பாப்பா

பெண்
தூண்டிலும் அவளாய்
மீனும் அவளாய்

Wednesday, June 9, 2010



பிடி கிடைக்கும் வரை
வழுக்கள்களே பயணமாய் ...

பயணத்தின் புறக்கணிப்பில்
வாழ்க்கையும் வந்துவிடலாம்

இருப்பினும் வாழ்க்கையை புறக்கணிப்பதேன்றல் தான்
பயணத்தை புறகணிக்க முடியும் ....



திருக்குறள் அல்ல

இன்னும் தொடங்கவே இல்லை என்றது
கவிதையின் கடேசி வரி


புறக்கணிக்கப்பட்ட விதைகள் எல்லாம்
முளைக்காமல் இருப்பதில்லை
என்ற நம்பிக்கையுடன் ...




என் எதிரிகளை
உணர நேரம் இல்லை

அவர்களுக்குள் இருக்கும்
நண்பனை
தேடி கொண்டு இருப்பதால்


உன் போல் யாரும் இல்லை
சில நேரங்களில்
உன்னை போல்
நீயும் இல்லை