Monday, December 31, 2012





மின்மினி பொழுதுகளாய் உன்னோடு 
மிரளும் குழந்தையாய் நீ இல்லா தனிமையோடு 

கானல் என்று அறியாமளுமில்லை 
காதல் குறையவும் வழியுமில்லை 

மொழி தீண்டும் பொழுதுகளில் 
ஆறும் என் ரணம் 

தீண்டா பொழுதுகளில் 
தீரும் என் .....







என் மையப்புள்ளியை 
தேடி 

வெகு அந்நியமாய் போன
என் மையப்புளியை தேடி 

விரல் பிடித்து என்னை 
எனக்குள் அழைத்து செல்லும்
என் மையப்புள்ளியை தேடி 

பிள்ளை பொழுதுக்காய் 
இன்னும் எத்துனை நாட்கள் 
என் மையப்புள்ளியை தேடி 

இழப்பினை தாங்கும் இதயமாய் 
இயல்பாய் இடி தரும் 
என் மையப்புள்ளியை தேடி 

வீராப்பை விதைத்து 
வீதியில் நிறுத்தும் 
என் மையப்புள்ளியை தேடி 

இதயம் தொடும் இதயங்களை 
உதிரம் வர உதறி விடும்
என் மையப்புள்ளியை தேடி 

எனக்கான சிம்மாசனங்களை 
ஏளன வசனங்களாக 
வரமாக்கிதரும்
என் மையப்புள்ளியை தேடி 





நெடுங்காற்றில் ஆடும் 
ஒற்றை பனையாய்

வெற்றிருக்கை 
துணைக்கு அமரும் 
நெடும் பயணமாய் 

இருப்பறிய
இறந்து பார்க்கும் 
இயல்பாய் 

பசியடக்கா 
பானையாய்

வினை பொழுதுகளும் 
வீணாய் போக 

எப்படி நானறிவேன் 
இப்படியல்ல நீ என்று