Sunday, November 6, 2011



தேடிப்புதைக்க வேண்டும்
என் தனிமையை

யார் இதயத்தில்
இடம் தருவீர்கள்

Wednesday, September 21, 2011



வலியதன் வலுவில்

வளைந்தது என் வனம்

துளி விசமாய்

துளை கனமாய்

பிழை ரணமாய்

பீடித்த பின் புலன்கள்

நீடிக்கும் என் கணங்கள்

நெடிய பயணம்

இடைவெளியில்லா தடங்கள்

இயல்புகளற்ற அண்ட வெளி

முடிவுகளற்று அறுந்து போகிறது

எதிர்ப்பின் இலக்கணங்களுக்குள்

எதிர்பார்ப்பின் ஏளனங்கள்

வாட்டி வதைக்கும் வாழ்க்கைதனை

அழுது ரசிக்கும் ரசிகனாகிறேன்

Wednesday, July 13, 2011



அழகாய்
இருக்கிறது
வாழ்க்கை
புகைப்படங்களில்...

Tuesday, July 12, 2011



நாட்கள்
சேமிக்கப் படுகின்றன
மகளின் சிரிப்பில்

Wednesday, June 29, 2011



தீர்ந்தபாடில்லை
மிச்சமிருக்கும்
வார்த்தைகள்

புத்தக பையை
துழாவும் போதெல்லாம்
கிடைக்கும்
கடேசி சில்லறை காசாய்
ஒவ்வொருமுறையும்
கிடைக்கும் வார்த்தைகள்

யாரேனும் வாசிக்கும்போது
கவிதையாகிவிடும்
வார்த்தைகள்

யாருக்காகவேனும் வாசிக்கும்போது
கானலாகிவிடும் வார்த்தைகள்

என்னை பிரதிபலிப்பதால்
விலகி நிற்கும் வார்த்தைகள்

விலகி நிற்பதால்
என்னை பிரதிபலிக்கும் வார்த்தைகள்

ஆசான்கள் வந்து
அர்த்தமாக்கும் வார்த்தைகள்

ஆசான்கள் லாலேயே
அர்த்தம் இழக்கும் வார்த்தைகள்

என் வார்த்தைகளா?
எனக்கான வார்த்தைகளா ?
என் வழியிலான வார்த்தைகளா?

ஏதென்று அறியாமல்
நான் வார்த்தைகளற்று .....





Wednesday, June 22, 2011



எனது தனியறை
நிரம்பி வழிகிறது
முகம் என்று நம்பிய நகங்களால்....

சில என்னுடையதும்
சில எனக்கானதும்

Monday, May 30, 2011



இயல்பு மாறுமா
இல்லை
மாறுவது இயல்பா

Monday, May 23, 2011



புறக்கணிப்பு நீளும் பொழுதுகளில்
கிடைப்பதில்லை வார்த்தைகள்

பெரும்பொழுதுகள்
புறக்கணிப்பின் அருகாமையில்
இருக்கையில்
நிகழ்ந்து விடுகின்றது
தோழமையின்
புறக்கணிப்பும்....

Friday, April 29, 2011




என் நினைவுகளுக்குள்
எப்பொழுதும் நீ
உன் நிகழ்வுகளில்
எப்பொழுதாவது நான்

கடந்து போகிறது வாழ்க்கை
சலனமில்லாமல்....

Tuesday, April 12, 2011


பிரிவுகளுக்கு அப்பால்
நினைவுகளின் நெருக்கம்


Saturday, April 9, 2011

Tuesday, April 5, 2011

Monday, March 14, 2011


விளையாட்டாய் ...

ஒரு கவிதை சொல்
என்றேன்

முதுகில் மூன்று அடி கொடுத்தாள்

திருக்குறளை விட ஒரு அடி அதிகம்தான்

Thursday, February 3, 2011

Sunday, January 30, 2011



மீன் கடை

குவித்து வைக்கப் பட்டு இருகின்றன
மீன்கள் - மனிதர்களை போல

நாற்றம் பார்பவன்க்குதான் ...
விற்பவனுக்கு அல்ல - மனிதம் போல

வகை வகையால் பிரித்து வைத்து
விலை சொல்வர் - இனங்கள் போல

மீன்கள் எப்பொழுதும் ஒருபடி மேல்

எந்த மீனும்
இன்னொரு மீனை விற்பதில்லை - தமிழர்களை அல்லாதார் போல்



Tuesday, January 25, 2011



திருக்குறள் அல்ல

பள்ளம் மேடு நிறைந்த சாலை
பாதை தேடும் நடுத்தரம்

Friday, January 21, 2011




எப்போதாவது வந்து விடுகிறாய் நினைவுகளில்
திரும்பி செல்வதற்குத்தான் பொழுதுகள் கடந்து விடுகின்றன

இன்பமும் துன்பமும் என இரு எல்லைகளுக்கும்
செல்கிற இந்த பயணத்தை மனம் விரும்பாமலுமில்லை

என்ன தான் இருந்தாலும்

நீ இல்லாத வெற்றிடத்தை
இனி
உன்னால் கூட நிரப்ப முடியாது

Tuesday, January 18, 2011



முன்பு எப்பொதும் இல்லாத தனிமை
வாய்த்தது எனக்கு உன்னால்

வலிக்கவில்லை இம்முறை

தனிமை ஒன்றே எனக்கு துணை
என்பதை ...


திரையிட்ட பார்வை
துளையிடும் வார்த்தை
கவனிக்கபடாத நாளை

இறுக்கமான அன்பு

இப்படிதான்
களவு போகுமோ
வாழ்க்கை


புரியாத புதிர் எல்லாம் இல்லை வாழ்க்கை
புரிந்து கொள்ள முயலாதது தான் வாழ்க்கை