Friday, August 27, 2010



கிளைகள் இல்ல மரம் நான்
இலைகள் இல்ல வரம் எனக்கு

வேர்கள் விரும்பா திசையில் என் எதிர்காலம்

தடம் பதிக்க கைவசம் நிழல் இல்லை

பொருந்தா தென்றல் போகின்ற வழியில்

நினைவுகளை கட்டி சேமித்து வைக்க
எந்த புன்னகையும் வாய்த்ததில்லை

Thursday, August 26, 2010



உதடும் உதடும்
சேர்ந்தும் விலகியும்
வார்த்தைகளை அழகாய் உச்சரிக்குமே

அது போலவே
உனக்கும் எனக்குமான
பிரிதல்களும் சேர்தல்களும்
காதலை அழகாக்குகிறது

Monday, July 19, 2010



உனக்கான என்னை என்னிடமும்
எனக்கான யாரையாவது உன்னிடமும்
தேடி தேடி பயில்கிறோம் காதலை

யார் முதலில் கிடைப்பினும்
சந்தோசப்படும் காதல்

என்ன செய்வது
காதலுக்கு ராசியில்லை

Saturday, July 10, 2010



நெடுந்தூரத்தில் கேட்கிற
ஓசை
எனக்கானது என்று
எல்லா திசைகளிலும்
ஓடி ஓடி
யாருமற்று
களைக்கையில்
மீண்டும் மீண்டும்
நீயே வருகிறாய்
வெறுமையை
பரிசளிக்க


வலிகளின் ஆழத்தில்
புதைந்து கிடக்கின்றன
கிடைக்காத ஆறுதல்களின்
நிர்வான பிணங்கள்

Saturday, July 3, 2010



...மெல்லிய சந்தோசம்

அறுத்து எரிகிற அவசரத்தில் ...
எப்பொழுதும்
வாழ்க்கை

Thursday, June 24, 2010



யாருமில்லாத பொழுதுகளில்
துணைக்கு வருகிறது
உன்னை போலவே
நிலா

Wednesday, June 16, 2010



பென்சில் கோடுகள்

எத்தனை முறை
எண்ணுவது
ரணங்களை

ஒரு முறையாவது
எண்ணியிருக்க வேண்டும்
ரணங்களின் கணங்களை


இங்கு எது முதல் ?

எண்ணமா
எண்ணிகையா
குறியீடா
நீயா
நானா

யாருக்கேனும் தெரியுமா

பதிவுகள் முக்கியமா ?
பகிர்தல்கள் முக்கியமா ?
இல்லை
படைத்தல்கள் முக்கியமா ?

மூலம் தெரியா
முகவுரைகளால்
என்ன சாதிக்க போகிறோம்

படித்தல்
படிகளாகி
ஏற்றி விடுவது
எதை எதை

எதில் புதைந்திருக்கிறது
என்பதை
எதில்
பதுக்கி வைத்துருக்கிரர்கள்

முதலில்
எதை தேடுவது ?

எதையா ?
எப்படியையா ?
.............................
உனக்கும் எனக்கும்
ஆன சந்திப்பை
நீயும் நானும் விரும்பாவிடினும்
நிகழ்த்துவது யாராக இருக்கும்

வேறு யாராக இருக்கும்

நம்மை விட
நம்மை நன்றாக
புரிந்திருக்கும் காதல் தான்

Monday, June 14, 2010


சவ ஊர்வலத்தில்
நடிக்காமல்
பிணம் மட்டும்
சாதிகள் இல்லையடி பாப்பா
இதை சொன்னவன்
எங்கள் சாதிகாரனடி பாப்பா

பெண்
தூண்டிலும் அவளாய்
மீனும் அவளாய்

Wednesday, June 9, 2010



பிடி கிடைக்கும் வரை
வழுக்கள்களே பயணமாய் ...

பயணத்தின் புறக்கணிப்பில்
வாழ்க்கையும் வந்துவிடலாம்

இருப்பினும் வாழ்க்கையை புறக்கணிப்பதேன்றல் தான்
பயணத்தை புறகணிக்க முடியும் ....



திருக்குறள் அல்ல

இன்னும் தொடங்கவே இல்லை என்றது
கவிதையின் கடேசி வரி


புறக்கணிக்கப்பட்ட விதைகள் எல்லாம்
முளைக்காமல் இருப்பதில்லை
என்ற நம்பிக்கையுடன் ...




என் எதிரிகளை
உணர நேரம் இல்லை

அவர்களுக்குள் இருக்கும்
நண்பனை
தேடி கொண்டு இருப்பதால்


உன் போல் யாரும் இல்லை
சில நேரங்களில்
உன்னை போல்
நீயும் இல்லை



Friday, February 5, 2010

கனவுகளை
காதலித்தேன்

காதல்
எல்லாம்
கனவாகிவிட்டது

Thursday, February 4, 2010



நீ புன்னகைக்க்காத நேரத்தில்
இரு ண்டு விடுகிறது உலகம்
என்னை ஏமாற்றியவர்கள் வரிசையில்
நீயும் நானும்
என்னை ஏமாற்றியவர்கள் வரிசையில்
நீயும் நானும்

பென்சில் கோடுகள்

பென்சில் கோடுகள்